புரூக், ஜாக்ஸ் அதிரடி: டக்வொர்த் லீவிஸில் ஆஸி.யை வென்றது இங்கிலாந்து!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றியைப் பதிவு செய்தது.

ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் மூன்றாவது போட்டி ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து அணியினர் களமிறங்கினர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசி.க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? முன்னாள் வீரர் பதில்!

ஆஸ்திரேலியா 304/7

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேட் ஷார்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். இருப்பினும் இருவரும் முறையே 14 மற்றும் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 82 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

மார்னஸ் லபுசேன் டக் அவுட்டாகி வெளியேற அவருக்குப் பின் வரிசையில் வந்தவர்களான கேமரூன் கிரீன் 42, அலெக்ஸ் கேரி 77*, மேக்ஸ்வெல் 30, ஹார்டி 44 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகள் 100 சதவிகிதம் முக்கியம்: முன்னாள் இந்திய வீரர்

ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ்

இங்கிலாந்து

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

பில் சால்ட் டக் அவுட்டாக்கி வெளியேற்றி மிட்சல் ஸ்டார்க், பென் டக்கெட்டையும் 8 ரன்னில் அவுட்டாக்கி வெளியேற்றினார். இதனால், 11 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற பரிதாப நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் இளம் வீரரான வில் ஜாக்ஸ் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகம்!

ஆட்டநாயகன் விருது வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக்

வில் ஜாக்ஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தனது முதல் சதத்தை நிறைவு செய்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உள்பட 110 ரன்களிலும், மற்றொரு ஆட்டக்காரரான லியம் லிவிங்ஸ்டன் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தனர்.

அணியின் ஸ்கோர் 37.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ஆக இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

டக்வொர்த் லீவிஸ்

மழையால் போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டடது. இங்கிலாந்து அணிக்கு 37.4 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் 254 ரன்கள் எடுத்தன் மூலம் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகள் 100 சதவிகிதம் முக்கியம்: முன்னாள் இந்திய வீரர்

இருப்பினும், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

சதம் விளாசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நான்காவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 27) லார்ட்ஸில் நடைபெறவுள்ளது.

இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகம்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024