வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தல்

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க இருக்கின்றனா்.

பிரதமர் எக்ஸ் தளப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை

முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான 3-ஆம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பின்னர், அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024