இரானி கோப்பை 2024: ரகானே தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இரானி கோப்பை தொடருக்கான மும்பை அணி ரகானே தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023 – 24 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு அஜிங்ய ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த தொடருக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியையும் பி.சி.சி.ஐ நேற்று அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை அணி விவரம்: அஜிங்ய ரகானே (கேப்டன்), பிரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), வித்தந்த் அத்தாத்ராவ் (விக்கெட் கீப்பர்), ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், ஹிமான்சு சிங், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, முகமது ஜீனெட் கான், ராய்ஸ்டன் டயஸ், சர்பராஸ் கான் *.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) *, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள் *, ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.

இதில் துருவ் ஜூரெல், யாஷ் தயாள், சர்பராஸ் கான் ஆகியோர் வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். அந்த போட்டியில் களமிறங்காத பட்சத்தில் அவர்கள் இரானி கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024