துபாய்க்கு செல்ல இருந்த விமானத்தில் புகை – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

துபாய்க்கு செல்ல இருந்த விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்வதற்காக நேற்று இரவு எமிரேட்ர்ஸ் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 280 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே இருந்த நிலையில், கோளாறை சரிசெய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. புகை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024