‘தக் லைப்’ படப்பிடிப்பு நிறைவு – படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

இந்தநிலையில் 'தக் லைப்' படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை எந்த படமும் விற்பனையாகாத விலையில் விற்பனையாகி ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது இந்த திரைப்படம். மேலும் 'தக் லைப்' படத்தினை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரபூர்வ தகவல் அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shooting Completed #Thuglife enters the next phase#Ulaganayagan#KamalHaasan#SilambarasanTR@ikamalhaasan#ManiRatnam@SilambarasanTR_@arrahman#[email protected]/bL7mEpKhXv

— Raaj Kamal Films International (@RKFI) September 24, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024