போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: அரசு பேருந்துகளில் எளிதாக, விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இணையதளம், செயலி ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சேவையை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 300 கி.மீ. தூரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு, ‘ஏசி’ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்க, முன்பதிவு மையங்கள் மட்டுமின்றி, இணையதளம் (www.tnstc.in), செயலி (TNSTC) மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

இதில் அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு வசதிகளுடன் இணையதளம், செயலி ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

பணியின்போது உயிரிழந்த மாநகர் போக்குவரத்து கழக ஊழியர்கள் 14 பேர், அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் 3 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர், நடத்துநருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்வில், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான்வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இரா.மோகன் பங்கேற்றனர்.

இந்த ஆன்லைன் சேவை மூலம் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரபேருந்து டிக்கெட்டும் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024