Saturday, September 21, 2024

ரெயில்களில் மூத்த குடிமக்கள் சலுகையை அமல்படுத்த வேண்டும்: மத்திய மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் அமல்படுத்துமாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்துக்கு முன்பு, ரெயில்களில் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சலுகை, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் 2021-ம் ஆண்டு விலக்கப்பட்ட போதிலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மட்டும் இன்னும் கொண்டுவரப்படவில்லை. ஆகவே, மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில், சென்னை-ஹவுரா மெயிலில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காத பயணிகள் ஆக்கிரமித்ததால், முன்பதிவு செய்த பயணிகள் ஏற முடியாமல் போனதை அறிந்து இருப்பீர்கள். ரெயில்களில் இதுபோன்ற சம்பவங்களால் ரெயில் பயணம் பாதுகாப்பு இல்லாததாகி வருகிறது. ஆகவே, இப்பிரச்சினையிலும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024