பெங்களூருவில் மகாலட்சுமி கொலையில் துப்பு துலங்கியது!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பெங்களூருவில், வாடகை வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி பற்றிய தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில், செப்டம்பர் 21ஆம் தேதி வாடகைக் குடியிருப்பில், இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, உடல் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் மகாலட்சுமி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது ஆண் நண்பர்தான், கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று அவரது கணவர் நேற்று தகவல் வெளியிட்டிருந்த நிலையில், மகாலட்சுமியுடன் பணியாற்றுபவர்தான், முக்கிய குற்றவாளி என்றும், மகாலட்சுமி, வேறொருவருடன் நெருங்கிப் பழகுவதை அவர் எதிர்த்து வந்ததும், இதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க.. தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராமே ரூ.7 ஆயிரத்தைத் தாண்டியதா?

மகாலட்சுமியும், கொலையாளி என சந்தேகப்படும் முக்தி என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் என்றும், மகாலட்சுமி பழகியதாகக் கூறப்படும் நபர் யார் என்று இதுவரை அடையாளம் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த மகாலட்சுமி, கொலை செய்யப்பட்டு, மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் 50 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதில், சந்தேகிக்கப்படும் நபர் முக்தி என்றும், அவரது செல்ஃபோன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை ஒடிசா – மேற்கு வங்க எல்லையில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடல் கூறாய்வு அறிக்கை என்ன சொல்கிறது?

மகாலட்சுமியின் உடல் 59 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. உடல் கூறாய்வு முடிந்து, உள்ளுறுப்புகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்று ஆய்வு நடத்தப்படுகிறது.

குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் கைரேகைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் தடயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது காவல்துறைக்கு சவாலாக மாறியிருக்கிறது.

குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

மகாலட்சுமியை கடைசியாக ரக்சா பந்தன் விழாவின்போதுதான் பார்த்ததாக அவரதுதாய் கூறியுள்ளார். அதன்பிறகு, அவரது செல்போன் சுவிட்ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு என் சகோதரியைப் பார்த்தது, இப்போது துண்டுத் துண்டாகத்தான் பார்க்கிறேன் என்று கதறி அழும் மகாலட்சுமியின் சகோதரி, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024