சென்னை காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர்!

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

சென்னை நுங்கம்பாக்கம் சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பெயரை அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 25) உத்தரவிட்டார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள காம்தார் நகர் முதல் தெருவிற்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு செப். 25 நம்மை விட்டுப் பிரிந்தார்.

படிக்க | காலாண்டு விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.

அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயரிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024