சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா செந்தில் பாலாஜி சிறை சென்றார்? தியாகி என்று கூறுவதற்கு? – தமிழிசை கேள்வி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

முறைகேடு வழக்கில் கைதானவரை உறுதியானவர் என்று பாராட்டுவது வேடிக்கை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக, வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா செந்தில் பாலாஜி சிறை சென்றார்? தியாகி என்று கூறுவதற்கு? என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

1. செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்… எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி… தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா?

2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்? தியாகி என்று கூறுவதற்கு?

3. இந்தியா கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது; இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல…

4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது தி.மு.க.

5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்…

6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால்… மத்திய அரசினால் அல்ல…

7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார்; எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு…

ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதானவரை உறுதியானவர் என்று பாராட்டுவது வேடிக்கை… இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1.செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்…. எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?….2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்….தியாகி என்று கூறுவதற்கு?….3.INDI… கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது…

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 26, 2024

You may also like

© RajTamil Network – 2024