சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சென்னையில் தில்லை கங்கா நகர், சிட்கோ திருமுல்லைவாயலில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் தில்லை கங்கா நகர், சிட்கோ திருமுல்லைவாயல், பெரியார் நகரில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தில்லை கங்கா நகர்: சக்தி நகர், பாலாஜி நகர் 1 முதல் 15-வது தெருக்கள் வரை, நேதாஜி காலனி 5 முதல் 9-வது தெருக்கள் வரை, ஏ.ஜி.எஸ். காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட்ஸ், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர்.

சிட்கோ திருமுல்லைவாயல்: எல்லம்பேட்டை, அம்பேத்கர் நகர், அன்னை இந்திரா நினைவு நகர், வீரப்பாண்டி நகர், நாகாத்தம்மன் நகர், இ.ஜி.நகர்.

பெரியார் நகர்: எஸ்.ஆர்.பி.கோவில் தெற்கு மற்றும் வடக்கு தெரு, ஜி.கே.எம்.காலனி மற்றும் பெரியார் நகர் அனைத்து தெருக்கள், வெங்கட்ராமன் சாலை, ஜெகநாதன் சாலை, ஜவ ஹர் நகர், ஜவஹர் நகர் வட்ட சாலை, லோகோ திட்டம், லோகோ ஒர்க்ஸ் சாலை, கார்த்திகேயன் சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024