பிரபாஸ் படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் ஜோடி?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும்.

சென்னை,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' ரூ.1,050 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னதாக இப்படத்தில் பிரபாசுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரபல பாலிவுட் ஜோடியான சைப் அலிகான் – கரீனா கபூர் இப்படத்தில் வில்லனாக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024