Friday, September 20, 2024

தனித்துவமான பிரபஞ்ச நிகழ்வு: அமீரக வானில் தென்பட்ட ‘ஹாம்பர்கர் விண்மீன்’

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

இந்த காட்சியை தொடக்கத்தில் பார்க்கும்போது ஏதோ ஒரு நெபுலாவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

அபுதாபி,

அமீரக வானில் தொலைநோக்கியில் காணும்போது இரு தட்டுகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு ஒரு சாண்ட்விச் தோற்றத்தில் காணப்படும் விண்மீன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி சர்வதேச வானியல் மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

அமீரக வானில் மிக நெருக்கமாக 2 ஒளிரும் தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டது போன்று சாண்ட்விச் தோற்றத்தில் விண்மீன் கூட்டம் தென்பட்டது. தொலைநோக்கி கேமரா மூலம் இந்த காட்சி புகைப்படமாக பதிவு செய்யப்பட்டது. நெருக்கமாக பார்க்கும்போது ஹாம்பர்கர் போன்று தோற்றமளிப்பதை காணலாம். ஹாம்பர்கர் என்படுவது இறைச்சி துண்டை நடுவில் வைத்து செய்யப்படும் பர்கர் உணவாகும்.

இந்த காட்சியை தொடக்கத்தில் பார்க்கும்போது ஏதோ ஒரு நெபுலாவாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அபுதாபி சீல் வானியல் கண்காணிப்பு மையத்தில் நிபுணர்களின் ஆய்வில் இது 900 ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவாகும்) தொலைவில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி காணப்படும் தூசு படலம் மற்றும் வாயுக்களால் ஆன மேகமாகும். இந்த 2 பிரகாசமான பகுதிகளுக்கு இடையில் வெற்றிடம் தோன்றுகிறது.

இதன் காரணமாக அந்த விண்மீன் சாண்ட்விச் வடிவத்தில் பிரகாசமாக மின்னுகிறது. அந்த வெற்றிடத்தின் இருமுனைகளிலும் பிரகாசமான பகுதிகள் உள்ளது. இவை பொதுவாக புதிய நட்சத்திரங்களுடன் வரும் கதிர்வீச்சு காரணமாக அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுக்கள் ஒன்றிணைந்து இந்த தோற்றத்தை உருவாக்குகிறது.

இந்த தனித்துவமான ஹாம்பர்கர் 900 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்ததால் மிகவும் சிறிய அளவில் தோன்றுவதாக உள்ளது. இந்த விண்மீன் தனுசு (சாஜிட்டேரியஸ்) விண்மீன் கூட்டத்தில் காணப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024