தெலங்கானா: வன அதிகாரிகளை தாக்கிவிட்டு ஜேசிபியுடன் மணற்கொள்ளையர்கள் தப்பியோட்டம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மணற்கொள்ளையில் ஈடுபட்டதைக் கண்ட வன அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தெலங்கானாவில் பாதுகாக்கப்பட்ட தட்வாய் வனப்பகுதியில் உள்ள தமரா வாய் வனப் பகுதியில், காந்தா சூரஜ் ரெட்டி என்பவர், சட்டத்தை மீறி மணற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட வன அதிகாரிகள் அவரிடமிருந்த ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காந்தா சூரஜ் ரெட்டி, தனது நண்பரையும் சகோதரரையும், வனப்பகுதிக்கு வருமாறு மொபைல் போனில் அழைத்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் விரைந்து சென்று, கட்டாபூர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்த வன அதிகாரியை தாக்கியதுடன், ஜேசிபியையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.

நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

வனத்துறை அதிகாரி வினோத் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன், விரல்களும் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். மேலும், 2 வன அதிகாரிகளும் காயமடைந்ததுடன், அவர்களின் ஜீப்பையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வனத்துறை அதிகாரி ராகுல் ஜாதவ் யாதவ், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து தாட்வாய் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில், காந்தா சூரஜ் ரெட்டி உள்பட மூவர் மீதும் பிரிவு 109 பி.என்.எஸ் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தட்வாய் துணை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா உறுதியளித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024