லாப முன்பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகம், வங்கி மற்றும் ரியால்டி ஆகிய துறைகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால் சரிந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 264.27 புள்ளிகள் குறைந்து 85,571.85 புள்ளிகளில் நிலைபெற்றது. அதே வேளையில் வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 142.13 புள்ளிகள் உயர்ந்து 85,978.25 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 61.3 புள்ளிகள் உயர்ந்து 26,277.35 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டிய நிலையில் வர்த்க நேர முடிவில் 37.10 புள்ளிகள் சரிந்து 26,178.95ஆக முடிந்தது.

நிஃப்டியில் பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் பிபிசிஎல், சிப்லா, சன் பார்மா, கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆட்டோமொபைல், மெட்டல், ஐடி, பார்மா, ஆயில் மற்றும் கேஸ் ஆகிய துறைகளின் பங்குகள் 0.3 முதல் 2.5 சதவிகிதம் வரையிலும் ரியாலிட்டி, மின்சாரம், வங்கி, மீடியா, எஃப்எம்சிஜி மற்றும் தொலைத்தொடர்பு குறியீடுகள் 0.3 முதல் 1 சதவிகிதம் வரையிலும் ஒரு கலவையான போக்கு காணப்பட்டது. அதே வேளையில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்தன.

ஆதித்யா பிர்லா பேஷன், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பல்ராம்பூர் சினி, பாம்பே பர்மா, போஷ், பிபிசிஎல், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சியட், கோல்கேட் பாமோலிவ், ஈச்சர் மோட்டார்ஸ், ஈஐடி பாரி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஜிண்டால் சா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், லட்சுமி மெஷின், லாயிட்ஸ் மெட்டல்ஸ், எம் அண்ட் எம், நால்கோ, நெஸ்லே இந்தியா, என்டிபிசி, பிசிபிஎல், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா பவர், டிவிஎஸ் மோட்டார், அல்ட்ராடெக் சிமெண்ட், வேதாந்தா, வெல்ஸ்பன் கார்ப் உள்ளிட்ட 285 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52வது வார உச்சத்தைத் தொட்டது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை வெகுவாக உயர்ந்தது. சியோல் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.629.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். அதே வேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.2,405.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.03 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 71.58 அமெரிக்க டாலராக உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024