முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமரை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் அளித்தார்.

இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் நேற்று ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்-அமைச்சரை சந்தித்து வரவேற்றார்.

பின்னர் அனைவரும் வரவேற்பறையில் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் புறப்பட்டார். இன்று இரவு அவர் அங்கு தங்குகிறார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024