Saturday, September 21, 2024

டீப்பேக்’ கிற்கு கடிவாளம் போட ‘டிஜிட்டல் இந்தியா” மசோதா: மத்திய அரசு தீவிரம்

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக ‛டீப் பேக்’ வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுத்திட ‘டிஜிட்டல் இந்தியா ” மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஏ.ஐ’ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், ‘மார்பிங்’ செய்து , பாலிவுட் நடிகைகள் சிலரின் வீடியோ, புகைப்படங்கள் ‛ டீப்பேக்’ மூலம் சமூக வலைத்தளங்களில் கடந்தாண்டு பகிரப்பட்டது நாடு முழுதும் அதிர்வலையை வெளிப்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பிரதமர் மோடி ‛‛கார்பா” நடனம் ஆடும் ‛டீப் பேக் வீடியோ வெளியானது குறித்து தன் கவலையையும் வெளியிட்டார்.

இந்நிலையில் ‛டீப் பேக்” விவகாரங்களுக்கு கடிவாளம் போட, மத்திய அரசு ‛‛ டிஜிட்டல் இந்தியா ” மசோதாவை கொண்டு வரவும், ஒழுங்குப்படுத்திடவும் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து கட்சிகளின் ஒரு மித்த கருத்துடன் இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024