கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

மழை காரணமாக 2வது நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை

கான்பூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக தொடக்க நாள் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் கனமழையும் பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. முதல் நாளில் 55 ஓவர்கள் இழப்பானது. மொமினுல் ஹக் 40 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தூரல் விழ தொடங்கியது. சற்று நேரத்தில் அது பலமான மழையாக மாறியது. இதனால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. மழை காரணமாக நேற்று ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்தது . இன்றும் கான்பூரில் மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024