ஷகிப் அல்-ஹசனின் பாதுகாப்பு எங்கள் கையில் இல்லை – வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

வங்காளதேச போராட்டத்தின்போது நடந்த ஒரு கொலையில் ஷகிப் அல்-ஹசன் பெயரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், அந்நாட்டின் எம்.பி.ஆகவும் இருப்பவர் ஷகிப் அல் ஹசன். இவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

முன்னதாக அவர் மீது வங்காளதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் அவர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இதனிடையே ஷகிப் அல்-ஹசன் அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் செய்யும் என்று நம்புவதாக கூறியிருந்தார்.

ஆனால் 'ஷகிப் அல்-ஹசனுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களது கையில் இல்லை, கிரிக்கெட் வாரியத்தால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. இந்த விஷயத்தில் அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்' என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் பரூக் அகமது கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024