மார்க்சிய கம்யூ. ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

புதுதில்லி: மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக ஞாயிற்றுக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானர்.

இந்த நிலையில், புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்காமல் சாகமாட்டேன்..! – கார்கே

மேலும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐஎம் மூத்த தலைவர்களில் ஒருவரான காரத், 2005 முதல் 2015 வரை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். 1985 இல் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1992 இல் அரசியல் குழு உறுப்பினரானார்.

கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் பிரிவாக அரசியல் குழு(பொலிட் பீரோ) உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024