துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024