இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2வது இன்னிங்சில் 29 ரன்கள் எடுத்த வங்கதேசம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 11 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் செப். 27 ஆம் தேதி தொடங்கியது.

இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 107 ரன்களை எடுத்திருந்தது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

முதல் இன்னிங்சில் இந்தியா அதிரடி

இந்தியா – வங்கதேசத்துக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டியின் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்களும் மழை காரணமாக கைவிடப்பட்டன.

தொடர்ந்து இன்று (செப். 30) நடைபெற்ற 4 வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

அடுத்தடுத்த சாதனை

ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். இவர் 51 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

படிக்க | 10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி புதிய சாதனை!

இந்திய வீரர் கே.எல். ராகுலும் 43 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களுடன் ஆட்டமிழந்ததால் அரை சதத்தை தவறவிட்டார். எனினும் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களைக் கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்திய அணி 34.4 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி தங்கள் 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேச வீரர் சாத்மன் இஸ்லாம் ஸாகிர் ஹாசனுடன் களமிறங்கினார்.

இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய பந்தில் ஸாகிர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய ஹாசன் முகமதுவையும் 4 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின்.

ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்களை சேர்த்திருந்தது. சாத்மன் இஸ்லாம் – மோமினுல் ஹக் ஜோடி களத்தில் உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024