மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

மாநிலத்தின் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37-க்கு ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது.

படிக்க: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதல்!

நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்று அமராவடிதி துணை ஆட்சியர் அனில் பட்கர் தெரிவித்தார்.

சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுகாக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

படிக்க: மெய்யழகன் நீளம் குறைப்பு?

மாவட்டத்தின் பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதிகளில் உள்ள தர்னியிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024