Wednesday, October 23, 2024

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம் – தமிழ்நாடு அரசு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்ததாக துரைமுருகன் அமைச்சரவையில் 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு இன்று (செப்.30) வெளியிட்டுள்ளது. அதில்,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு 4-வது இடத்திலும் ஐ.பெரியசாமி 5-வது இடத்திலும் பொன்முடி 6-வது இடத்திலும், ஏ.வ.வேலு 7-வது இடத்திலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன.

புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு 21-வது இடமும், டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடமும் கயல் விழிக்கு 35-வது இடமும் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024