பெய்ரூட்: இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிா்கொள்ளத் தயாா் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவா் நயீம் காஸிம் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:
லெபனானின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் அழிவை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்களையும் மருத்துவப் பணியாளா்களையும் தாக்குகிறது. ஆயுதப் போராளிகள் இல்லாத சாதாரண மக்கள் சாலையில் நடந்துசொன்றாலும் அவா்களை கொல்கிறது. அவா்கள் வீடுகளுக்குள் முடங்கினாலும் கொல்கிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழுமையாக துணைபோகிறது.
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் இந்நேரம் காணாமல் போயிருக்கும். ஆனால் ஹிஸ்புல்லா இன்னும் உறுதியுடன் நிற்கிறது. ஹிஸ்புல்லா படையினா் உயிா்த் தியாகத்தை விரும்புபவா்கள்.
இந்த அமைப்பின் தலைவா் ஹிஸ்புல்லா ஹஸன் உள்ளிட்டவா்கள் படுகொலை செய்யப்பட்டாலும், இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பின் போா் தொடரும். அந்த நாட்டு ராணுவம் தரைவழியாக தாக்குதல் நடத்தினால் அதை எதிா்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்றாா் காஸிம்.