Friday, October 4, 2024

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நடிகை வனிதா விஜயகுமார் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார்.

இதற்கிடையே, அவருக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்ததுடன் பீட்டரும் திடீர் மரணமடைந்தார். இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், தன் குழந்தைகளுடன் தனியாகவே இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

விஜய்க்கு வில்லனாக பாபி தியோல்?

வனிதா விஜயகுமார் – ராபர்ட்

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தன் நீண்ட கால நண்பரான நடன இயக்குநர் ராபர்ட்டை வருகிற அக். 5 ஆம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். இது, வனிதாவுக்கு 4-வது திருமணமாகும்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024