வங்கதேசம் திணறல்! இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு வங்கதேச அணி சுருண்டது.

இதனைத் தொடர்ந்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி விளையாடி வருகின்றது.

மழையால் ரத்து

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் செப். 27 ஆம் தேதி தொடங்கியது.

இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 107 ரன்களை எடுத்திருந்தது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

முதல் இன்னிங்சில் இந்தியா அதிரடி

இந்தியா – வங்கதேசத்துக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டியின் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்களும் மழை காரணமாக கைவிடப்பட்டன.

தொடர்ந்து இன்று (செப். 30) நடைபெற்ற 4 வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி, 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை எடுத்திருந்தது.

10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி புதிய சாதனை!

இந்திய பவுலர்கள் அதிரடி

கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வங்கதேச அணியினரை இந்திய பவுலர்கள் திணறடித்தனர்.

146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்கதேச அணி, 94 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

You may also like

© RajTamil Network – 2024