Sunday, October 6, 2024

பொன்முடி துறை மாற்றத்துக்கு ஆளுநருடனான மோதல் காரணமா? அமைச்சர் ரகுபதி விளக்கம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுக்கோட்டை: அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

ஆளுநருடனான மோதல் போக்கை விட்டு கைவிட்டு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பொன்முடி துறை மாற்றப்பட்டதற்கு ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பது காரணமல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல. உயர்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

நானும் சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கவில்லை. அன்றைய நாளில் எனக்கு வேறு பணிகள் இருந்தன. அதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதுகுறித்து அப்போதே பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடத்தில் சொல்லிவிட்டேன்.

ந’மது’ அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!

உண்மை இல்லை

மேலும் மனோதங்கராஜ் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்ததால் தான் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை.

நேரில் ஆய்வு செய்யலாம்

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு அங்கிருந்த குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட பழுதுதான் காரணம். அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் நேரில் ஆய்வு செய்யலாம்.

ஒட்டுமொத்த அத்தனை திமுகவினரும் எதிர்பார்த்த, வலியுறுத்திய, பல வகைகளில் முதல்வரிடம் வலியுறுத்தியபடியே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி உறுதி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய பணிகள் முதல்வர் நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும்.

கருத்து சொல்ல விரும்பவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை வீசினார்களா? கைதவறி விழுந்ததா? என்பதில் அவர்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. உள்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை என ரகுபதி கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024