Sunday, October 6, 2024

ரஜினிகாந்த் குணமடைய ஆந்திர முதல்வர் வாழ்த்து!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

நடிகர் ரஜினிகாந்த் குணமடைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எனது நண்பரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024