Sunday, October 27, 2024

வங்காளதேசத்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா – டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

துபாய்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா (74.24 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தப்பட்டியலில் 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (62.50 சதவீதம்), 3வது இடத்தில் இலங்கையும் (55.56 சதவீதம்) உள்ளன.

4 முதல் 6 இடங்களில் முறையே இங்கிலாந்து (42.19 சதவீதம்), தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), நியூசிலாந்து (37.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

India's all-out attack approach paid off at Green Park as the side secured crucial #WTC25 points #INDvBANhttps://t.co/Zt5jB7C5W2

— ICC (@ICC) October 1, 2024

You may also like

© RajTamil Network – 2024