ஜார்க்கண்ட் சென்ற பிரதமரிடம் காங்கிரஸ் 3 கேள்விகள்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஜார்க்கண்ட் சென்றுள்ள பிரதமரிடம் 3 கேள்விகள் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி ஜார்க்கண்டில் ஹசாரிபாக்கில் ரூ. 83,700 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிரதமர் அறிவித்த வாக்குறுதிகளையே இன்னும் செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியிடம் 3 கேள்விகள் கேட்க வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

மாநிலத்திற்கு ரூ. 1.36 லட்சம் கோடியை பிரதமர் ஏன் வழங்கவில்லை?

ஜார்க்கண்டில், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களால்தான் நிலக்கரிச் சுரங்கங்கள் இயக்கப்படுகின்றன. அவை மாநில அரசுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளன. நில இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1,01,142 கோடியும், பொதுக் காரணங்களுக்காக ரூ. 32,000 கோடியும், நிலக்கரி காப்புரிமைத் தொகையாக ரூ. 2,500 கோடியும் நிலுவையில் உள்ளன.

The non-biological PM is in Jharkhand today. Three questions he must answer –
1. Why is he not releasing 1.36 lakh crores due to Jharkhand?
The Central government still owes Jharkhand lakhs of crores of rupees in coal royalties and central scheme benefits. In Jharkhand, coal…

— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 2, 2024

பாஜகவை பொறுத்தவரை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மாற்றந்தாயாகவே நடத்தப்படுகின்றன; ஜார்க்கண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

மத்திய அரசு இன்னும் ஜார்க்கண்டிற்கு நிலக்கரி காப்புரிமைத் தொகை மற்றும் மத்திய திட்டப் பலன்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது. ஜார்க்கண்டுக்கும் அதன் மக்களுக்கும் செலுத்த வேண்டிய 1,36,042 கோடி ரூபாய் எங்கே?

8 லட்சம் மக்களுக்கு வீடுகளை தர பிரதமர் ஏன் மறுக்கிறார்?

மத்திய அரசின் முதன்மை வீட்டுவசதித் திட்டமான பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், ஜார்க்கண்டில் உள்ள 8 லட்சம் தகுதியான பயனாளிகளுக்கு மத்திய அரசு இன்னும் பலன்களை வழங்கவில்லை.

2021 – 2022 ஆம் ஆண்டில், இந்த திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளம், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளை பட்டியலிட்ட போதிலும், 4 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் அதன் மக்களுக்கு உரிமையான 8 லட்சம் வீடுகள் எங்கே உள்ளன?

15 மாதங்களுக்குப் பின் சுறுசுறுப்பான செந்தில் பாலாஜியின் இன்ஸ்டா கணக்கு!

2014 ஆம் ஆண்டில் பிரதமர் வாக்குறுதியளித்த கல்லூரிகள் எங்கே?

ஜார்க்கண்டின் 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல பொறியியல் கல்லூரிகள் உள்பட பல தொழில்துறை, கல்வி திட்டங்களுக்கு பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், ராஞ்சியில் உள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், குந்தியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே நிறுவப்பட்டன. அவர்களுக்கும் சில ஆண்டுகளில் நிரந்தர வளாகம் இல்லை.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசு, ராஞ்சியில் இந்திய மேலாண்மை கழகம் போன்ற உயர்தர நிறுவனங்களையும், மத்திய பல்கலைக்கழகத்தையும் நிறுவியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளித்த நிறுவனங்களை பிரதமர் வழங்கத் தவறியது ஏன்?

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி முடிவுற நிலையில், நவம்பர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் ஜார்க்கண்ட் வருகையும், புதிய வளர்ச்சித் திட்டங்களும் சந்தேகமளிப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கருத்துகள் கூறி வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024