ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் பும்ரா! கோலி, ஜெய்ஸ்வாலுக்கு முன்னேற்றம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்களுக்கான டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜஸ்பிரித் ​பும்ரா, சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினைவிட ஒரு புள்ளிகள் முந்தி, இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்தார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை

இரண்டாவது டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே நேரத்தில் வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் நான்கு இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசன் 5 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க:பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் பதவி விலகினார்!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா நியூசிலாந்திற்கு எதிரான தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 7-வது இடத்தைப் பிடித்தார். அவரின் சிறந்த தரநிலை இதுவாகும்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 72 மற்றும் 51 ரன்கள் அடித்தன் மூலம் டெஸ்ட் பேட்மேன்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்திற்கு முன்னேறி தனது சிறந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிக்க:மீண்டும் விமர்சனங்களின் பிடியில் பாகிஸ்தான் அணி!

இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும் உள்ளனர். அதே சமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டான் பிராட்மேனின் சாதனை முறியடித்த இலங்கையின் வலது கை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ்,ஐந்து இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற இலங்கை வீரர்கள் தினேஷ் சண்டிமால் 20-வது இடத்திலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலைகள்

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குச் செல்லவும் இருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024