பிகாரில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துக: கார்கே கோரிக்கை!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

பிகாரில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

பிகாரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவரும் நிலையில் அங்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.62 லட்சத்தை எட்டியுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

இதையும் படிக்க: அரசு இல்லத்திலிருந்து வெளியேறும் கேஜரிவால்! எங்கு செல்கிறார்?

இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,

பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சூழல் குறித்து கவலை அளிக்கிறது. 17 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களில் இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக வடக்கு பிகாரில் பாலங்கள் இடிந்துள்ளது. மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துசென்றாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிக்க: மழையால் சாலைகள் நிரம்புகின்றன.. குளங்கள்? ஒரு சொட்டு நீர் இல்லாத 20% நீர்நிலைகள்!!

அதேசமயம், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய விமானப்படை, என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் அளித்துவரும் உதவிக்கு முழு மனதுடன் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு நிறுவனங்களின் அனைத்து உதவிகளும் எங்களுக்குத் தேவை என்றும் அவர் கூறினார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசுக்கு உதவ வேண்டும். பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் இதர நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்

என்டிஆர்எப்.,யின் 16 குழுக்களும், எஸ்டிஆர்எப்.,யின் 17 குழுக்களும் 975 படகுகளும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024