Monday, October 21, 2024

தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவித்தது இலங்கை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 50 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 50 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளது. இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 50 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புணே: முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாயார் சடலமாக மீட்பு

இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய உயரதிகாரிகள் எக்ஸ் தளத்தில், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 50 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர், மேலும் இந்த வார இறுதியில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இலங்ககை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் கடந்த மாதம் 7 இந்திய மீனவர்களும், ஆகஸ்ட் மாதம் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்களைத் தொடர்ந்து 50 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மீனவர்கள் கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024