Monday, October 21, 2024

ஆசிரியரின் சைக்கிளை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்றிருக்கிறேன்: முதல்வர் ரங்கசாமி பகிர்ந்த அனுபவம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

புதுச்சேரி: நான் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியரின் சைக்கிளை துடைப்பதாக கூறி அதை திருட்டுதனமாக எடுத்துச் சென்று ஓட்டிய அனுபவம் உள்ளதாக இந்திய திரைப்பட விழவில் முதலமைச்சர் ரங்கசாமி தனது சிறு வயது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

குரங்கு பெடல் என்ற தமிழ் திரைப்படத்திற்கு இந்திய திரைப்பட விழாவில் புதுச்சேரி அரசு சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்குழு, அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து இந்திய திரைப்பட விழா 2023 மற்றும் சிறந்த திரைப்பட இயக்குனருக்கு விருது வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தலைமை தாங்கி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட "குரங்கு பெடல்" என்ற தமிழ் திரைப்படத்திற்காக அதன் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி பாராட்டினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, திரைப்படத்தின் வாயிலாக நல்ல கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது என்றும், புதிய தொழில்நுட்பம் வாயிலாக ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க. . . மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு: இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனு!

மேலும், அன்றைய காலத்தில் வாத்தியாரின் சைக்கிளை திருட்டுதனமாக எடுத்துச் சென்று குரங்கு பெடல் போட்டு ஓட்டி செல்வார்கள். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. வாத்தியார் சைக்கிளை துடைப்பதாக கூறி அந்த சைக்கிளை ஓட்டி சென்றுள்ளேன் என்று கூறினார்.

எங்களது காலத்தில் சைக்கிள் வாங்குவது மிகவும் கடினம். அதை மனதில் வைத்து தான் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறோம். அப்பொழுது வீட்டிற்கு ஒரு சைக்கிள் தான் இருக்கும். அதையும் சைக்கிள் செயினால் ஜன்னலில் பூட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது 2 லட்சம் ரூபாயில் பைக் வாங்கி அதை நடுரோட்டில் நிறுத்துகின்றனர்.

சைக்கிளை மறக்கக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு வழங்குகிறோம். சைக்கிள் ஓட்டினால் ஒரு நல்ல உடற்பயிற்சி என்றார்.

மேலும் திரைப்படங்களை பார்த்தே பல விஷயங்களை பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். எனவே பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் கருத்துகள் உள்ள படங்களை இயக்குங்கள் என பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024