Monday, October 21, 2024

மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு: இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள், துர்கா பூஜையை முன்னிட்டு, சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாள்களிலாவது தங்களுக்கு நல்ல சாப்பாடு வழங்குமாறு சிறைக் கைதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, பிரிஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவுகளை சிறைக் கைதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும், அக்டோபர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாள்களிலாவது நல்ல உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வகைகளால், அவர்களது முகங்களில் மகிழ்ச்சியை பார்க்க முடியும் என நம்புகிறோம். அவர்களுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நல்லதாக அமையும் என நம்புவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டன் பிரியாணி மட்டுமல்லாமல், மீன் இறைச்சியுடன் மலபார் ஸ்பினாச், மீன் இறைச்சி மற்றும் பருப்புக் கடையல், பூரி – கொண்டைக்கடலை, சிக்கன் தொக்கு, பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகளும் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப பரிமாறப்படவிருக்கிறதாம்.

You may also like

© RajTamil Network – 2024