Monday, October 21, 2024

ஏற்காட்டில் குளிர்ச்சியான காலநிலை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சேலம்: ஏற்காட்டில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து மீள ஏற்காடு சென்றவர்களுக்கு உற்சாகம்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஏற்காட்டில் தற்போது இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையே, காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் ஏற்காடு வந்துள்ளனர்.

கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு இடையே ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிளின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை இடியுடன்‌ கூடிய கனமழை பெய்தது.

அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் சாரல்‌ மழையாக பெய்து வந்தது. இன்று அதிகாலை முதலே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பனி மூட்டம் அமைந்துள்ளது. ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த பனி மூட்டத்தை வெகுவாக ரசித்தனர். பனி மூட்டத்தில் நடந்து சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலைகளில் சென்றன. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெயில் தாக்கத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மீளும் வகையில் ஏற்காட்டில் இன்று காலநிலை குளிர்ச்சியாக மாறியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024