Monday, October 21, 2024

ஆயுதபூஜை: தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்! முன்பதிவு தொடக்கம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#chennai festival special train
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி இடையே 08,09- 10-2024 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்.. இயக்கம் pic.twitter.com/71FJ65tqQk

— TamilNadu Train Usersதமிழ்நாடு ரயில் பயனர்கள் (@TrainUsers) October 4, 2024

வார இறுதி மற்றும் விழாக் கால கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி, மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

சென்னையிலிருந்து 8ஆம் தேதி புறப்பட்டு, தஞ்சை, தேவக்கோட்டை, கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

அதுபோல, கோவை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக். 6ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று(அக் 5) மற்றும் அக் 6ம் தேதி ரெனிக்குண்டாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் பகல் 2.45க்கு புறப்பட்டு மாலை 5.45க்கு ரெனிக்குண்டா சென்றடையும். ரெனிக்குண்டாவில் மாலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 8.50க்கு சென்னை வந்து சேரும்.

You may also like

© RajTamil Network – 2024