Monday, October 21, 2024

மெரீனாவில் விமானப் படை சாகசம்: கண்டு மகிழும் முதல்வர் ஸ்டாலின்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை மெரீனாவில் விமானப் படை சாகசத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டுள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

மும்பையில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விமான சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டுரசிக்க சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்னை மெரீனாவுக்கு வருகை தந்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மெரீனாவில் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024