Monday, October 21, 2024

மணிப்பூர் கலவரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மணிப்பூரில் உக்ருல் காவல் நிலையத்தில் கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட 20 துப்பாக்கிகளில் 16 துப்பாக்கிகளை மீட்ட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 2 அன்று சுவச் அபியான் திட்டத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை சுத்தம் செய்வது தொடர்பாக நாகா இனத்தைச் சேர்ந்த இரு கிராமத்தினருக்கு இடையே நடந்த கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டு, 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலைத் தடுக்க இரு கிராமங்களிலும் தடை உத்தரவு விதிக்கப்பட்டு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதையும் படிக்க: 10 வயது சிறுமி பாலியல் கொலை: மேற்கு வங்கத்தில் போராட்டம்

இந்தக் கலவரத்தில் ஒரு கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்து 20 துப்பாக்கிகளைக் கொள்ளையடித்டுச் சென்றதாக காவல்துறை ஆய்வாளர் ஐகே முய்வா இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதுகாப்புப் படைகள், சமூக அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தற்போது 16 துப்பாக்கிகளைக் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் பிஸ்டல்கள், ரைஃபிள்கள் ஆகியவை இருந்துள்ளன.

இதையும் படிக்க: ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

உக்ருல் மாவட்டத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மணிப்பூர் ரைஃபிள்ஸ், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் கிராமத் தலைவர்கள் உதவியுடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

”குறைவான அளவு பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். இனி எந்த வன்முறை சம்பவங்களும் இங்கு நடைபெறாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். இதில், சமூக அமைப்புகளின் பங்கு மிகப்பெரியது. இங்கு பதற்ற நிலைமை தணியும் வரை இங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருப்போம்” என்று அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிகாரி சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024