Monday, October 21, 2024

உ.பி. காட்டு விலங்குகளால் அடுத்தடுத்து இரு நாள்களில் பலியான குழந்தைகள்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்த இரு நாள்களில் காட்டு விலங்குகள் தாக்கியதில் 2 குழந்தைகள் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் கங்காபேஹர் கிராமத்தில் முனாவ்வர் என்பவர், தனது 12 வயது மகன் சஜேப்புடன் சனிக்கிழமை (அக். 5) மாலையில் கரும்புத் தோட்டத்தின் வழியே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, சஜேப்பை தோட்டத்துக்குள் இழுத்துச் சென்றது.

இதனைத் தொடர்ந்து, சஜேப்பை தேடும் பணியில் பலரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இறுதியாக கரும்புத் தோட்டத்திலிருந்து, சஜேப் சடலமாகவே மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, குர்தைஹா கிராமத்திலும் வெள்ளிக்கிழமையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த காட்டு விலங்கு 3 வயது பெண் குழந்தையை இழுத்துச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தை தேடப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை (அக். 5) காலையில் காக்ரா ஆற்றில், குழந்தையின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஓநாய்தான் குழந்தையை இழுத்துச் சென்றது என்று குழந்தையின் தாயார் கூறுகிறார். ஆனால், அந்த பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் இதுவரையில் இருந்ததில்லை; ஆகையால், சிறுமியை இழுத்துச் சென்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024