மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புதுடெல்லி,

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ந்தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.

மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார்.

சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது. இந்நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை, இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது முய்சு தனது இந்திய பயணத்தின்போது ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், முகமது முய்சு மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024