Tuesday, October 15, 2024

காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சண்டிகார்,

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார். காலை முதலே முன்னிலையில் இருந்த வினேஷ் போகத்தை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 1, 417 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024