ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. அதேபோல், ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை பெற்றுவருகிறது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மூன்று கட்டங்களாக ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிக்க: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை: காஷ்மீர் ஆப்பிள் கொடுத்து தமிழகத்தில் கொண்டாட்டம்!

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று(அக். 8) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜகவும், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி…

ஜம்மு – காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)

இந்தியா கூட்டணி – 47

பாஜக – 29

மக்கள் ஜனநாயக கட்சி – 4

இதர கட்சிகள் – 3

சுயேச்சை – 7

ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)

காங்கிரஸ் – 35

பாஜக – 50

சுயேச்சை – 3

இதர கட்சிகள் – 2

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024