தென் கொரியா, அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும்: கிம் ஜாங் உன் எச்சரிக்கை!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிம் ஜாங் உன் இதற்கு முன்னரும் பலமுறை அணு ஆயுதங்களை உபயோகிக்கவுள்ளதாக எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் இந்த முறை அமெரிக்காவில் தேரிதல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து ஏதேனும் பதற்றத்தை ஏற்படுத்த இவ்வாறு கூறியிருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரிய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று உறையாற்றிய கிம் ஜான் உங், “எதிரிகள் ஆயுதங்கள் தாங்கிய படைகளைப் பயன்படுத்த முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்து தாக்குதல் திறன்களையும் பயன்படுத்துவோம்.

இதையும் படிக்க: அக். 7 தாக்குதல் நினைவு தினம்: இரு தேசத் தீா்வு சாத்தியமா?

அதில், அணு ஆயுதங்கள் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் அணு ஆயுதம் மற்றும் ராணுவத் திட்டமிடல்களை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால், கொரிய தீபகற்பத்தில் சமநிலை பாதிக்கும் அபாயம் உண்டாவதால் வடகொரியாவின் அணு ஆயுதப் பயன்பாடு அதற்கான பதிலாக இருக்குமென்று கிம் தெரிவித்தார்.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென் கொரியாவின் திறன்களுடன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை இணைக்கும் திட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தென் கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில், வடகொரியா அவற்றைப் பயன்படுத்தினால் கிம் அரசுக்கு முடிவு வரும் என்று அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 80 ஆண்டுகளுக்கு பின் வானில் ஓர் அதிசய நிகழ்வு..!

கடந்த சில வாரங்களாக வடகொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வடகொரியா ஏவுகணைகள் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தென் கொரிய அதிபர் அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக இவ்வாறான பதற்றமூட்டும் செயல்களை கவன ஈர்ப்புக்காக வடகொரியா செய்து வருவதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024