டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

முல்தான் டெஸ்ட்

இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நேற்று(அக்.7) தொடங்கியது.

சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிவரும் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்று பறிகொடுத்தது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்தை சமாளிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது.

ஆதிக்கம் செலுத்தும் ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு ஜோ ரூட் முக்கிய அடித்தளமாகவுள்ளார். இவர் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருவதுடன் பல சாதனைகளையும் படைத்து வருகிறார்.

ஜோ ரூட் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரது அந்தச் சாதனையை எட்ட 27 ரன்கள் தேவையாக இருந்தன. அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஜோ ரூட்.

பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் அவர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவர் 27 ரன்கள் எடுத்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தார். இதுவரை 59 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் உள்பட 5005* ரன்கள் குவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

1. ஜோ ரூட்: 59 டெஸ்டில் 5005* ரன்கள்

2. மார்னஸ் லாபுசேன்: 45 டெஸ்டில் 3904 ரன்கள்

3. ஸ்டீவ் ஸ்மித்: 45 டெஸ்டில் 3486 ரன்கள்

4. பென் ஸ்டோக்ஸ்: 48 டெஸ்டில் 3101 ரன்கள்

5 – பாபர் அசாம்: 52 டெஸ்டில் 2375 ரன்கள்

தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவர்கள் தொடரிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரை அவர்களால் வெல்ல முடிந்தால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கலாம்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024