ஒரு வாரத்திற்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் இன்று (அக். 8) முடிந்தன. கடந்த ஒருவார காலமாக பங்குச்சந்தை சரிவுடன் முடிந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 584.81 புள்ளிகள் உயர்ந்து 81,634.81 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.72 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 217.40 புள்ளிகள் உயர்ந்து 25,013.15 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.88 சதவீதம் உயர்வாகும்.

வங்கித் துறை பங்குகள் உயர்வுடன் முடிந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ துறை பங்குகள் சற்று உயர்ந்திருந்தன.

வணிகத்தின் தொடக்கத்தில் 80,826.56 புள்ளிகளாகத் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக

81,763.28 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் அதிகபட்சமாக 80,813.07 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்து 81,634 புள்ளிகளாக நிறைவு பெற்றது.

உயர்ந்திருந்த பங்குகள்

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன.

அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 4.68% உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக எம்&எம் 3.46%, எச்டிஎஃப்சி வங்கி 2.06%, ரிலையன்ஸ் 1.95%, எல்&டி 1.85%, அல்ட்ராடெக் சிமென்ட் 1.42%, எஸ்பிஐ 1.41%, என்டிபிசி 1.33%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.85% பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இதேபோன்று அதிக சரிவை சந்தித்தது டாடா ஸ்டீல், இந்நிறுவனப் பங்குகள் -2.95% சரிவைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக டைட்டன் கம்பெனி -2.68%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.19%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் -2.02%, பஜாப் ஃபைனான்ஸ் -1.14%, டாடா மோட்டார்ஸ் -0.87% சரிவைச் சந்தித்தன.

இதேபோன்று வணிகத்தின் தொடக்கத்தில் 24,832.2 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 25,044 வரை உயர்ந்தது. பின்னர் 24,756.80 வரை சரிந்தது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். ஒரு வாரத்துக்குப் பிறகு நிஃப்டி 25 ஆயிரத்திற்கு மேல் சென்றது. முடிவில் 217 உயர்ந்து 25,013.15 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் பேடிஎம் நிறுவனப் பங்குகள் 15.20% உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக திரிவேணி டர்பைன் 11.00%, பிஎஸ்இ 10.90%, அனந்த் ராஜ் 9.61%, வருன் பிவரேஜஸ் 8.85%, ஜேபி பவர் 8.51% உயர்ந்து காணப்பட்டன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024