பிரிட்டனில் மக்கள்தொகை விகிதம் அதிகரிப்பு! கருவுறுதல் விகிதம் குறைவு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

பிரிட்டனில் மக்கள்தொகை விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. எனினும் அங்கு கருவுறுதல் விகிதம் குறைவாகவே உள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகளைக் கொண்டு சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2023 மத்தியில் இருந்த மக்கள் தொகை விகிதமானது, 2022ஆம் ஆண்டின் மத்தியில் இருந்ததைவிட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. இது 1970ஆம் ஆண்டு இருந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இறப்பு விகிதம் பிரிட்டனில் அதிகரிப்பதால் இயற்கையான மக்கள் தொகை விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது குறைவான கருவுறுதல் விகிதத்தைக் குறிக்கிறது.

பிரிட்டனில் மக்கள்தொகை சற்று அதிகரித்ததற்கு மற்றொரு காரணமாக சர்வதேச இடம்பெயர்வு பார்க்கப்படுகிறது. 2023 மத்தியில் மட்டும் 6,77,300 பேர் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு சதவீதமும், ஸ்காட்லாந்தில் 0.8 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 0.5 சதவீதமும் மக்கள்தொகை விகிதம் அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024