ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்: மோடி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.

பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு நன்றி. காஷ்மீரில் அதிக வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

I am proud of the BJP’s performance in Jammu and Kashmir. I thank all those who have voted for our Party and placed their trust in us. I assure the people that we will keep working for the welfare of Jammu and Kashmir. I also appreciate the industrious efforts of our Karyakartas.…

— Narendra Modi (@narendramodi) October 8, 2024

ஹரியாணா மக்களுக்கு நன்றி

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் 37 இடங்களிலும் இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

ஹரியாணாவில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றதையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

ஹரியாணாவில் மீண்டும் தனிப்பெரும்பான்மை வழங்கிய ஹரியாணா மக்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹரியாணாவில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி.

ஹரியாணா மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மாபெரும் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என ஹிந்தியில் மோடி பதிவிட்டுள்ளார்.

इस महाविजय के लिए अथक परिश्रम और पूरे समर्पण भाव से काम करने वाले अपने सभी कार्यकर्ता साथियों को भी मेरी बहुत-बहुत बधाई! आपने ना केवल राज्य की जनता-जनार्दन की भरपूर सेवा की है, बल्कि विकास के हमारे एजेंडे को भी उन तक पहुंचाया है। इसी का नतीजा है कि भाजपा को हरियाणा में यह…

— Narendra Modi (@narendramodi) October 8, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024