ஜோ ரூட் தன்னலமற்றவர்..! இந்த சாதனையை முறியடிக்க நீண்ட காலமெடுக்கும்! ஸ்டோக்ஸ் புகழாரம்!

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

ஜோ ரூட்டின் சாதனையை முறியடிக்க மிக நீண்ட காலங்கள் தேவைப்படுமென பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது. தற்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 84 ஓவர் முடிவில் 424/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஜோ ரூட் 144 ரன்களுடனும் ஹாரி புரூக் 107 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

இதையும் படிக்க:இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்..! 35ஆவது சதமடித்த ஜோ ரூட்!

ஜோ ரூட் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிர்ந்த விடியோவில் பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது:

சில நேரங்களில் 50 ரன்களை 100ஆக மாற்றுவதால் மட்டும் அணி வெற்றி பெறுவதில்லை. ஆனால், ஜோ ரூட்டின் தன்னலமற்ற தன்மைதான் அணிக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளது. இது அவரது நம்பமுடியாத இயல்புத் தன்மையைக் காட்டுகிறது.

ஜோ ரூட் எப்போதும் அணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி விளையாடுகிறார். இருந்தும் அவர் இவ்வளவு ரன்கள் அடித்திருப்பது எங்களுக்கு கூடுதல் போனஸ்தான். ஜோ ரூட் நம்பமுடியாத ஒரு வீரர்.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ஆஸி. வீராங்கனை!

இந்த சாதனையை ஒருவர் இங்கிலாந்தில் முறியடிக்க மிக நீண்ட நீண்ட காலங்கள் தேவைப்படும். இதை நிகழ்த்துவது மிகவும் கடினமானது என்றார்.

33 வயதாகும் ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிப்பாரா என இங்கிலாந்து ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

"Incredible player. Great bloke." ❤️
Hear @BenStokes38 on @Root66’s incredible achievement…
Click below for full interview

— England Cricket (@englandcricket) October 9, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024